Sunday, June 24, 2012

துளித் துளி - இல்லறம்

இல்லறம்
 
மனைஅறம் மாண்புகொள் - பெண்
துணைபெறத் தான்புகழ்
 
பெண்மையைப் பெருமைசெய் - அதன்
திண்மையைத் திறமும்செய்
 
குடும்பம் குடும்பம்தான் - அதில்
படும்படும் இன்பம்தான்
 
கட்டிலுக் கிருவர் - காதல்
மட்டிலும் ஒருவர்
 
ஒருவர்க் கொருவர் - அக
உறவில் நிறைவர்
 
காற்கட்டும் உண்டுதான் - அதன்
மேற்கட்டும் கொண்டுதான்
 
அறமே அன்புதான் - காதல்
திறமே தெம்புதான்
 
புணரியல் காவியம் - உடல்
திணறிய ஓவியம்
 
பந்த பாசம் - இடை
வந்த வாசம்
 
பாச பந்தம் - முகம்
மூசும் சந்தம்
 
மையல் கொஞ்சும்தான்
சமையல் கொஞ்சம்தான்
 
ஊடலின் கூடம்
கூடலின் மாடம்
 
ரசங்கள் எதற்கும்
சரசங்கள் மிதக்கும்
 
ரகசியம் காதல் - உயிர்க்(கு)
அவசியம் நேர்தல்
 
ஆண்பெண் வசியம்
காண்ப(து) அவசியம்
 
பொழுதும் புசியும் - வாழ்வு
முழுதும் ரசியும்
 
பகலில் மணந்தார் - இடை
புகலில் இணைந்தார்
 
மாமியார் படித்தனம்
சாமியார் குடித்தனம்
 
மருமகள் குடித்தனம்
வருமிகழ் படித்தனம்
 
அரங்கத் திருமணம் - அந்
தரங்கத் தொருமணம்

No comments:

Post a Comment