Tuesday, June 19, 2012

துளித் துளி - அநுபவம்

அநுபவம்

சிந்தித்தும் சேரும்
நிந்தித்தும் சாரும்.

புண்படும் நெஞ்சம்
பண்படக் கொஞ்சும்.

மனத்தின் அரிப்பு
மவுனச் சிரிப்பு.

வருந்தும் மனம்தான் - பின்
திருந்தும் தினம்தான்.

செயல்களின் மூடம் - பல
புயல்களின் ஓடம்.

சந்திக்கும் தோறும்
நிந்திக்கத் தேறும்.

பெற்றால் பீடம்
கற்றால் பாடம்.

தலையிலே முட்டும் தாள் - பல
நிலையிலே குட்டும் தாள்.

அநுபவ ஆசான் - வெறும்
கனவவை பேசான்.

அடைமழை முன்தான் - காலத்
திடைபிழை பின்தான்.

காலம்கொள் கட்டியம் - அதன்
மேல்உங்கள் வட்டியும்.

பயன்தான் பாடம் - பெறப்
பயந்தால் மூடம்.

No comments:

Post a Comment