Saturday, June 23, 2012

துளித் துளி - திருமணம்

திருமணம்

சொர்க்கத்தில் உறுதி - நகை
ரொக்கத்தில் இறுதி

உடன்படுக் கைதான் - அதற்(கு)
உடன்படிக் கைதான்

வரன்கள் அடக்கம்
சவரன்கொள் தொடக்கம்

பாக்கிய வதிகள் - கடன்
பாக்கி யவதிகள்

வாரிசு யாகம் - அதைக்
கோரி,சை யோகம்

பிள்ளைப் பேறு - வயிறு
கொள்ளச் சோறு

சையோகச் சடங்கும் - கருப்
பையாகத் தொடங்கும்

குழந்தைத் தொழிலகம் - வர
எழுந்த எழிலகம்

கருவறைப் பாசனம் - சிசு
வரவைச்சொல் சாசனம்

கருப்பைக்கே வரவு - கூட
இரப்பைக்கே நிறைவு

புகலும் மணம்தான் - அதன்
நகலும்அம் மணம்தான்

விளக்கும் அணையுமே - உடன்
விளங்கும் அணையுமே

சரசமோ டுறவு - பல
விரசமோ டிரவு

உணர்ச்சிக்கே வேகம் - உடல்
புணர்ச்சிக்கே மோகம்

அணைப்புக்கே சட்டம் - அதன்
பிணைப்புக்கே திட்டம்

விவாகம் மையலால் - மனை
நிர்வாகம் தையலால்

பருவத்துப் பந்தல் - உடன்
உறவொத்துக் கந்தல்

கொடுக்கல் வாங்கல் - ஆண்பெண்
படுக்கைத் தாங்கல்

நடப்பதோ குடும்பம் - கூடக்
கொடுப்பதோ இன்பம்

கவர்ச்சியால் காதல் - அதன்
நுகர்ச்சியால் நோதல்

குடும்பத் தையல்தான் - இற்று
விடும்பல் மையல்தான்

அவதாரமாய் இருக்கும் - பின்
அவ தாரமாய் நெருக்கும்

விரிதலும் உறவுதான் - தொடர்
விரிசலும் பிறகுதான்

காமமேல் வேள்வி - பின்
சேமமேல் கேள்வி

கவர்ச்சிதான் முன்னால் - மனத்
தளர்ச்சிதான் பின்னால்

தொடர்கதைத் தூண்டில் - பின்
இடர்வதைக் கூண்டில்

அடையுமுன் வேகம் - பின்
விடையுமே சோகம்

தாம்பத்யம் ஏற்கும் - பின்
தாம்பத்யம் நோக்கும்

அடங்கினால் சம்பந்தம் - மனம்
முடங்கினால் நிர்ப்பந்தம்

கோட்டைக்கு வேட்கை - அதே
கோட்டைபின் ஓட்டை

பந்த நாட்டம் - உடன்
விந்தை ஆட்டம்

இல்அறம் சிலர்சிலர் - அது
இல்லாஅறம் பலர் பலர்

No comments:

Post a Comment