ஸ்ரீ சக்தி உலா
தேவி சரணமெனத் தேர்ந்த தலங்கள்தொறும்
கோவில் உறைவாளைக் கும்பிட்டேன் - மேவிஅவள்
சீரடிகள் என்றுமென் சிந்தையுமிப் பாவிலுமாய்
வேரடிகொண்(டு) ஊன்றும் விழைந்து
கோவில் உறைவாளைக் கும்பிட்டேன் - மேவிஅவள்
சீரடிகள் என்றுமென் சிந்தையுமிப் பாவிலுமாய்
வேரடிகொண்(டு) ஊன்றும் விழைந்து
நூல்
குங்குமக் கோவில் கொலுவினாள் - குளிர்
கோமளச் சாந்து நிலவினாள்
மங்கள ஆரத்தி மாலையாள் - சர்வ
மறைகொளும் சாரத்தின் லீலையாள் (1)
அமுத கலையின் அழகினாள் - கோடி
அழகெனும் வெள்ளம் பழகினாள்
இமைப்பில் உலகே இயற்றுவாள் - தேடி
எண்ணரும் ஞானம் பயிற்றுவாள்! (2)
குலமகள் கற்புக் குடியினாள் - அவர்
கொண்டிடும் தாலி முடியினாள்
நலமென் மழலை நயத்தினாள் - காம
நரகருக் கான பயத்தினாள் (3)
ஞானரதமே நடத்துவாள் - செஞ்சீர்
ஞாயிற்றுப் பட்டே உடுத்துவாள்
மோன பதமே இயக்குவாள் - அண்டம்
மொத்தமும் சுற்றி மயக்குவாள் (4)
பூத்துக் கொடியாய்ப் பொலிபவள் - நறும்
புண்ணியர் நாவில் மலிபவள்
காத்துக் குடிஓம்பி வாழ்பவள் - அன்னை
காலமும் காப்பெனச் சூழ்பவள்! (5)
No comments:
Post a Comment