ஸ்ரீ சக்தி உலா (6-10)
சகல கலைதரும் சாரதை - என்றும்
சார்ந்தனுபூதியாய்ப் பார் அதை
புகலும் துணையும் புனிதையே - எந்தப்
புரட்சிக்கும் வித்(து)அவ் வனிதையே (6)
சார்ந்தனுபூதியாய்ப் பார் அதை
புகலும் துணையும் புனிதையே - எந்தப்
புரட்சிக்கும் வித்(து)அவ் வனிதையே (6)
மஞ்சனம் ஆடும் மகமாயி - பரி
மளநயம் கூடும் ஜகமாயி
அஞ்சும்நம் வாழ்விற் கபயமே - அவள்
அழகள் நம் சென்னிக்குபயமே! (7)
மூவர்க்கும் மூத்த முதல்விதான் - சங்க
முத்தமிழ்க் கூடல் புதல்விதான்
யாவர்க்கும் ஆன இறைவிதான் - மற்றும்
யாவுக்கும் தானே கருவிதான்! (8)
தந்தன தந்தன சிந்துகள் - அங்குத்
தறிகெட்டும் ஓடாத பந்துகள்
வந்தனம் வந்தனம் என்றுதான் - அண்டம்
வாழ்த்தும் அன்னையைச் சுழன்றுதான்! (9)
ஊழி அவளுக் கொருபதம் - அதன்
ஒடுக்கம் அவளின் மறுபதம்
காளிமா காளி கருணையே - நோக்கக்
கருதும் நெஞ்சம்மை சரணையே (10)
No comments:
Post a Comment