ஸ்ரீ சக்தி உலா (31-35)
நவராத் திரிகொள் நலங்கினாள் - சக்தி
நாள்தோறும் போற்றத் துலங்கினாள்
சிவராத் திரிபயன் செய்குவாள் - நம்முட்
சிந்தையிலும்கனல் பெய்குவாள் (31)
நாள்தோறும் போற்றத் துலங்கினாள்
சிவராத் திரிபயன் செய்குவாள் - நம்முட்
சிந்தையிலும்கனல் பெய்குவாள் (31)
வீட்டினுள் குத்து விளக்கினாள் - மனை
விரதங்கள் ஏற்கும் வழக்கினாள்
பாட்டின் பொருளெனும் பைங்கிளி - ஆதி
பராசக்தி யாய்விரி ஐங்கிளி! (32)
விரதங்கள் ஏற்கும் வழக்கினாள்
பாட்டின் பொருளெனும் பைங்கிளி - ஆதி
பராசக்தி யாய்விரி ஐங்கிளி! (32)
கடம்ப வனத்துக் கலைக்குயில் - மற்றும்
கானவேடர்தம் மலைக்குயில்
நடம்பயில் மேட்டு நறுங்குயில் - தில்லை
நாயகி காஞ்சிப் பெருங்குயில் (33)
கானவேடர்தம் மலைக்குயில்
நடம்பயில் மேட்டு நறுங்குயில் - தில்லை
நாயகி காஞ்சிப் பெருங்குயில் (33)
மயிலா புரித்தவ மாலினி - சப்த
மாதரும் ஆகிய சூலினி
கயிலாசருக்கன்புக் காமத்தி - செல்வம்
கடைக்கணிக் கும்புவிச் சேமத்தி (34)
மாதரும் ஆகிய சூலினி
கயிலாசருக்கன்புக் காமத்தி - செல்வம்
கடைக்கணிக் கும்புவிச் சேமத்தி (34)
ஆனையங் காட்டில் அகிலம்மை - தொண்டர்க்(கு)
அருள வேற்காட்டில் முகிலம்மை
வான்நயம் காட்டும் வடிவம்மை - முல்லை
வயினவி வேதம் படிவம்மை (35)
அருள வேற்காட்டில் முகிலம்மை
வான்நயம் காட்டும் வடிவம்மை - முல்லை
வயினவி வேதம் படிவம்மை (35)
No comments:
Post a Comment